Photobucket HOLY! HOLY! HOLY IS THE LORD OF HOST Photobucket

Tuesday, May 31, 2011

June month Newsletter

Dear friends in Christ,
Wishing you in the name of Jesus Christ, who was, who is and who is to come!
The promise given by Lord Jesus Christ for this month is
“Thy gentleness hath made me great”. 2 Samuel 22:36
Dear friends, Lord’s grace is said to be gentleness. The Holy Bible says, grace is nothing but which is given to the disqualify persons.
Sometimes you may think of yourselves that you are not useful for anything and no meaning for your life in this world. Also you may be abased and ashamed by many in these days. Some might have teased you for being a Christian. But Bible says,
“A little one shall become a thousand and a small one a strong nation”. Isaiah 60:22
When the Lord rescue the king David from Saul’s hand and all his enemies hands, David had praised and worshipped the Lord and told HIS gentleness had made me great.
Now I  wish to recollect the last month promise word which is “But the LORD is with me as a mighty terrible one: therefore my persecutors shall stumble, and they shall not prevail”  Jeremiah 20:11
I hope that the Lord might have saved you and kept you away from your enemies. The same Lord who saved you from your enemies, shall make you great in this month.
The Bible says “I am the LORD that maketh all things” in Isaiah 44:24. Let u stop lament over your failures and start praising for HIS grace. Though you are qualify for nothing and also a sinner, HIS grace can change into a great person. The Lord will make you a great and HE is going to anoint your head with oil before your enemies. Because of this, whoever cursed you will come to your side.
Arise… Remove the dust in you and arise. The Lord is going to become a light for you. The Lord is going to make all your ways success. The excellence that is going to be given to you is very higher than the excellence in this world.
Dear friends, for all the people who are all reading this I prophesy in the name of our Lord Jesus Christ that the Lord shall make you great in your spiritual life by removing all the destructions in this worldly life.
The Lord shall make your dry life into a fruitful life. On behalf of all your shame HE shall crown you with the eternal life. Above all these things the Lord shall make you a prophet. Arise to go along with Jesus.
The Lord shall make your legs as the deer legs and may give you the strength as that of unicorn. Many will come to your shining light. Praise the Lord for all these prophesies. At that time surely HIS gentleness will make you great.
May the Lord Jesus Christ be with each and every one of you and make you great as per the promise word. Amen!


Sunday, May 15, 2011

2011 மே மாத வாக்குத்தத்தம்
இருந்தவரும், இருக்கிறவரும், வருகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்கள் யாவரையும் வாழ்த்துகிறேன். கர்த்தராகிய  இயேசு கிறிஸ்து இந்த மே மாதத்திலே நமக்கு கொடுக்கும் வாக்குத்தத்தம்

"கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார். ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்."  ஏரேமியா 20:11

அன்பானவர்களே, மிகவும் சோர்ந்து, எனக்கு யாருமே இல்லையே, நான் ஒரு அனாதையாய், எந்த ஒரு அன்பும் இல்லாமல், நம்பினவர்களால் தற்போது  துன்பப்படுத்தப்பட்ட நிலைமையில் இருக்கிறீர்களா??
தாயின் கருவறையில் இருக்கும் போதே  உங்களை தெரிந்துக் கொண்ட தேவன், ஒரு போதும், எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களை கைவிடவே மாட்டார்.  நாம் யாரும் அவரைத் தேடிப் போகவில்லை. ஜீவனுள்ள தேவனாகிய அவர் தாம் அவருடைய கிருபையினாலும்  இரக்கங்களாலும் பாவிகளாகிய நம்மை தெரிந்துக் கொண்டார். இப்படியிருக்க, உங்களை துன்பப்படுத்துகிறவர்களாலும் உங்களுடைய சோதனைகளாலும் ஏன் கலங்கி, குழம்பிப் போய் இருக்கிறீர்கள்???
வேத வசனம் இவ்வாறாக  கூறுகிறது. "ஆவர் தாமே சோதிக்கப்பட்டுப் பாடுப்பட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறார்" எபிரெயர் 2:18

இப்படியாக உங்களின் கஷ்டங்களிலும் சோதனை நேரத்திலும் கர்த்தராகிய யெகோவா பராக்கிரமசாலியாய் உங்களோடே கூட இருந்து உங்களை விடுவிப்பாராக. சில நேரத்தில் நீங்கள் அதிகமாய் நேசித்தவர்கள் கூட, உங்களுக்கு எதிராகவும் , உங்களை துன்பப்படுத்திக் கொண்டிருக்கலாம்.
உலக அன்பு எல்லாம் மாயை தான். நமக்காக தன் உயிரைக் கொடுத்த இயேசு கிறிஸ்துவின் அன்புத் தான் உண்மையான அன்பு. ஆகையால் உலக மக்களால் வருகின்ற பிரச்சனைக்களுக்கு சோர்ந்து போகாமல், பவுல் கொரிந்தியருக்கு எழுதிய புத்தகத்தில் கூறுவது போல
              " திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடு கூட அதற்குத் தப்பிக் கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்" (1 கொரிந்தியர் 10:13)
என்ற நம்பிக்கையில் உறுதியாய் இருங்கள்.

ொதுவாக நாம் நெருக்கத்திலும், சோதனை நேரத்திலும் தான் அதிகமான ஆவிக்குரிய அறிவுரைகளையும் பெலத்தையும் பெற முடியும். அதுமட்டுமல்லாமல் நிறைய பாடங்களையும் கற்றுக் கொள்ள முடியும்.
அன்பானவர்களே, இதுவரைக்கும் இவ்விதமாக கலங்கி சோர்ந்துபோய் இருக்கும் உங்களுக்கு கர்த்தர் இந்த மாதத்தில் கொடுக்கிற வாக்குத்தத்தின் படி அவர் (கர்த்தர்) பயங்கரமான பராக்கிரமசாலியாய் உங்களோடு இருப்பார். உங்களை துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்.
அதுமட்டுமல்லாமல் உபாகமம் 28:7 வசனத்தின் படி, " உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறியடிக்கப்படும்படி ஒப்புக் கொடுப்பார். ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள். ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்."
ோர்ந்துபோகாதிருங்கள்.. கர்த்தர் உங்களை அக்கினி மதிலாக வேலியிட்டு காத்து, சத்துருவின் கைகளிலிருந்து விலக்கி உங்கள் ஒவ்வொருவரையும் இரத்தக் கோட்டைக்குள்ளே மறைத்து காத்துக் கொள்வாராக.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதாமே இந்த வாக்குத்தத்ததின்படியே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.


Monday, April 4, 2011

2011 ஏப்ரல் மாத வாக்குத்தத்தம்
இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்கள் யாவரையும் வாழ்த்துகிறேன். கர்த்தராகிய  இயேசு கிறிஸ்து இந்த ஏப்ரல் மாதத்திலே நமக்கு கொடுக்கும் வாக்குத்தத்தம்

"இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார். இனித் தீங்கைக் காணாதிருப்பாய்."  செப்பனியா 3:15

அன்பானவர்களே, தீங்குகளினால் மனம் நொந்து, துக்கத்தினால் சோர்ந்து போய் காணப்படுகிறீர்களோ? சங்கீதக்காரனாகிய தாவீது இப்படியாய் சொல்கிறார்,

"கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறப்படியால் நான் அசைக்கப்படுவதில்லை." சங்கீதம் 16:8

ஆண்டவரை நீங்கள் எப்பொழுதும் முன்பாக வைக்க வேண்டும். உங்கள் இருதயத்தில் இயேசு கிறிஸ்துவுக்கு முதல் இடம் கொடுக்க வேண்டும். அப்படி நீங்கள் செய்யும் பட்சத்தில் கர்த்தர் நிச்சயமாய் உங்கள் தீமைகளை நன்மைகளாய் மாற்றுவார்.
பக்தனாகிய யோபு அநேக தீங்குகளை சந்தித்தவர் என்று வேதம் சொல்லுகிறது. தன்னுடைய சரீரத்தில் பாடுகள், குடும்பத்தில் அநேக உபத்திரவங்கள், நண்பர்கள் மூலமாய் அநேக நெருக்கங்கள், இப்படியாய் பல போராட்டத்தில் சிக்கித் தவித்தவர் பக்தனாகிய யோபு என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு கூறுகிறது.
ஆனாலும் அப்படிப்பட்ட  சூழ்நிலையிலும் யோபு இப்படியாய் சொல்கிறார்,
 "தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைப்படாது,” என்பதை அறிந்திருக்கிறேன்"  யோபு 42:2
என்ன ஒரு நம்பிக்கை, எப்படிப்பட்ட விசுவாசம். இதைத்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களிடத்திலும் என்னிடத்திலும் எதிர்ப்பார்க்கிறார். எப்படிப்பட்ட சீக்கலில் நீங்கள்  சீக்கிக் கொண்டிருந்தாலும் ஆண்டவரைப் பார்த்துச் சொல்லுங்கள், தேவரீர்  நீர்  சகலத்தையும் செய்ய வல்லவர் என்று, அதுதான் உங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப் பண்ணும்,
உங்களுடைய ஒவ்வொரு விசுவாச அறிக்கையும் தேவனாகிய இயேசு கிறிஸ்து உங்களிடத்தில் கிரியை செய்ய வழி வகுக்கும்.
அன்பானவர்களே, அவிசுவாசி ஒருவன் தேவனைப் பிரியப்படுத்த முடியாது. அவனிடத்தில் தேவனுடைய கிரியைகளும் காணப்பட முடியாது. ஆகவே நீங்கள் சோர்ந்து போகாமல் விசுவாசமாய் இருங்கள். யோபின் விசுவாசத்திற்கு கிடைத்த பரிசைப் பாருங்கள்,
"கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்." யோபு 42:12
கர்த்தர் நிச்சயமாய் உங்களையும் இப்படியாய் ஆசீர்வதிப்பார். உங்கள் முன்னிலைமையைக் காட்டிலும் கர்த்த்ர் அதிகமாய் உங்களை ஆசீர்வதிப்பார்.
பயப்படாதிருங்கள், கர்த்தர் உங்கள் ஆக்கினைகளை எல்லாம் அகற்றி, உங்கள் சத்துருக்களை உங்கள் எல்லையை விட்டு முற்றிலுமாய் விலக்கி, உங்கள் நடுவிலே அவர் இருக்கிறப்படியினால் நீங்கள் இனித் தீங்கைக் காண்பதில்லை.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதாமே இந்த வாக்குத்தத்ததின்படியே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.


Monday, March 7, 2011

2011 மார்ச் மாத வாக்குத்தத்தம்

இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்கள் யாவரையும் வாழ்த்துகிறேன். இந்த மார்ச் மாதத்திலே கர்த்தராகிய  இயேசு கிறிஸ்து நமக்கு கொடுக்கும் வாக்குத்தத்தம்

"நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்"     ஏசாயா 66:13


அன்பானவர்களே, இக்கால சூழ்நிலையில் ஒவ்வொருவரும் தேற்றரவற்று, ஆதரவற்று காணப்படும் சூழ்நிலையே காணப்படுகிறது. என்னதான் குடும்பத்தினர், உறவினர்கள் என  இருந்தாலும் ஒவ்வொருவரும் ஏனொ தனிமைப்படுத்தப்பட்டு ஒரு ஏக்கத்தோடு, ஒரு வெறுமையோடு, ஒரு தேடுதலோடு, ஒரு வெறுப்போடு தங்கள் வாழ்வை கழித்துக் கொண்டிருக்கிற ஜனங்கள், வாலிபர்கள் ஏராளமாய் காணப்படுகின்றனர்.

இந்த வெறுமைக்கு காரணம் சத்துருவானவன் ஆண்டவருடைய உறவில், ஐக்கியத்தில்  இருந்து நம்மை தூரப்படுத்தி நமக்கு துக்கத்தை வருவிக்கப் பண்ணுவதே சத்துருவானவனின் நோக்கமாக காணப்படுகிறது.


அன்பானவர்களே, உங்கள் தேடுதல்கள், உங்கள் ஏக்கங்கள், இவைகள் எல்லாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவாகவே இருக்கட்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் நிச்சயமாய், "எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்". நீங்கள் சிறுமைப்பட்டு, நொறுங்குண்டு காணப்படுகிறீர்களோ? கர்த்தர் சொல்கிறார்,

"சிறுமைப்பட்டு, ஆவியில்  நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்கிறவனையே நோக்கிப் பார்ப்பேன்"  ஏசாயா  66:2

அவர் உங்களை நோக்கிப் பார்க்கிறவராய் காணப்படுகிறார். நீங்கள் அவருடைய வசனத்திற்கு நடுங்கிறவராய் காணப்பட வேண்டும். அவரை (கிறிஸ்துவை) நாடுங்கள், அவர் வசனத்திற்கு நடுங்குங்கள், அவர் உங்களை தேற்றுவார். எனக்கு அன்பானவர்களே, நன்றாய் யோசித்துப் பாருங்கள்.

நீங்கள்  ஒரு சிறு குழந்தையாய் இருந்த சமயத்தில் உங்கள் தாய் உங்களை தேற்றி இருப்பார்கள். அடுத்து, உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்ட பயணத்தின் போதும், உங்கள் தோல்வியில் உங்களை யாரோ ஒருவர் தேற்றியிருக்கலாம்.

அந்த தேற்றரவே உங்களை இவ்வளவு தூரம் நிற்க வைக்குமானால் எம் பரமனாகிய  இயேசு கிறிஸ்துவின் தேற்றரவு உங்களுக்கு  எவ்வளவு ஆசீர்வாதமாய்  இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

நிச்சயமாய் உங்கள் வாழ்க்கைப் பயணத்திலே ஒரு மாறுதலை கொடுக்க கர்த்தர் விரும்புகிறார். அதற்காகவே உங்களை தேற்றுவேன் என்று வாக்குப் பண்ணுகிறார். நீங்கள்
அவரை அண்டிக் கொள்ளுங்கள். அவர் நிச்சயமாய் உங்களை ஆற்றித் தேற்றி அரவணைப்பார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஒரு தாய் தேற்றுவது போல தேற்றுவாராக.  ஆமென்.

Tuesday, February 22, 2011

God's words

“I will instruct thee and teach thee in the way which thou shall go. I will guide thee with mine eye.”Psalm 32:8
Dear bro/sis,
Greet you all in the name of our Lord Jesus Christ.  Now a days in this without money we can’t live. Everything costs something.
But the true love and grace given by our Lord can’t be bought at any cost. If you are true and holy you can receive it freely. He is pouring this true love on all us at free of cost.
Because of His love and grace, His anointed many of us with Holy Spirit for free of cost. Just think my dear bro/sis, Are we using it effectively??? Are you keeping it holy and safely???Are we true for His love??? Or leaving our heavenly father are we searching for some other love??? 
He gave His life for us for free of cost. We received His grace and tasted His love freely. Just think are we worthy of it???
It’s the human tendency to expect something from their dear ones. It is natural. But our Lord expects nothing from us. He asks our heart alone. Because HE loves us very much. That’s why in you(church) He wants to live.
Though we are sinners, HE gives us and satisfies us with all the things as our desires. Just think, to this awesome God, what are you going give???
He says if you allow Him in your heart, HE will cleanse all the unwanted things with HIS blood completely and live in it. And also says, HE will instruct and teach you the way in which we want to go and also says, guide us with His eyes..
Now a days even for L.K.G, U.K.G classes it costs in thousands. But our saviour will teach everything for us at free of cost as the scripture says in Psalm 32:8.
But for all these things to enjoy in our life, the simple thing we want to do is to give our heart to Him..Are you ready to give??? Days are very less for His coming. So let’s ready soon.
Just try. Take one step forward towards Him by giving your heart. In the next minute, HE will make all the steps in your work to go forward ten times easier.
Give your and enjoy the miracle. May God bless you..
Amen.