Photobucket HOLY! HOLY! HOLY IS THE LORD OF HOST Photobucket

Monday, January 3, 2011

2011 ஆம் ஆண்டு வாக்குத்தத்தம்
"நான் (கர்த்தர்) மோசேயோடே இருந்தது போல, உன்னோடும் இருப்பேன்"
யோசுவா 1 : 5

                    கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.கடந்த ஆண்டு முழுவதுமாக நம்மை கண்ணின் மணிபோல் காத்துகொண்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை துதிக்கிறேன்.
                   எத்தனையோ இக்கட்டின் பாதைகளிலும், கண்ணீரிலும், நெருக்கங்களிலும் அலைக்கழிக்கப்பட்டு மிகவும் சோர்ந்து, வருகிற ஆண்டு எப்படியாக இருக்குமோ என்று கலங்குகிறீர்களா ?கர்த்தர் சொல்லுகிறார், வருகிற ஆண்டிலே, "நான் (கர்த்தர்) மோசேயோடே இருந்தது போல, உன்னோடும் இருப்பேன்"
                அன்பானவர்களே, இஸ்ரவேலர்கள் வாக்குத்தத்தத்தின் சுதந்திரவாளிகள். ஆனால் அவர்கள் 400 ஆண்டுகளாக எகிப்திலே அடிமைப்படுத்தப்பட்டு, சிறுமைப்படுத்தப்பட்டு தத்தளித்தனர்.இஸ்ரவேலர்கள் தங்கள் பாவங்களை அறிந்து, கர்த்தரை விட்டு தூரம் போனதை உணர்ந்து, கர்த்தரை நோக்கி முறையிட்ட பொழுது, அவர் அதற்கு செவிசாய்த்தார் என்றும் வசனம் கூறுகிறது.
                இஸ்ரவேலர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்கும்படியாக மோசேயை கர்த்தர் எழுப்பினர். எகிப்தின் படைகள் முழுவதையும் செங்கடலில் ஆழ்த்தி இஸ்ரவேலர்களை இரட்சித்தார்.ஆனால் முறுமுறுப்பு, அவநம்பிக்கை காரணமாக வாக்குத்தத்தத்தின் சுதந்திரவாளிகள் வாக்குத்தத்தத்தை முழுமையாக சுதந்தரிகவில்லை. 40 ஆண்டு காலம் வனாந்திரத்தில் சுற்றித் திரிந்தனர். மோசேயும் மரித்துப் போனார்.
               ஆனால் கர்த்தர் மனதுருக்கம் நிறைந்தவர். இச்சூழ்நிலையில் தன்னுடைய ஜனத்தின் ஆசீர்வாதம் முழுமையடைய தெரிந்துக் கொள்ளப்பட்டவனே யோசுவா. கர்த்தர் யோசுவாவை நோக்கி 'நான் மோசேயோடே இருந்தது போல,உன்னோடும் இருப்பேன்' என்று முறையிடுகிறார்.
                  யோசுவாவைக் கொண்டு கர்த்தர் இஸ்ரவேலர்களை கானான் தேசத்திற்குள் அழைத்துச் சென்றார். பிரியமானவர்களே, நீங்களும் வாக்குத்தத்தம் பெற்றும் முழுமை அடையாமல் இருக்கிறீர்களா? கவலையை விடுங்கள்.. இந்த ஆண்டு (2011) பூரணமான ஆசீர்வாதம் முழுமை அடையும் ஆண்டு.
                   கர்த்தரே உங்களோடு கூட இருந்து ஆசீர்வாதம் முழுமை அடைய செய்வார். அது மட்டுமின்றி இந்த ஆண்டு கர்த்தரை நம்பாதவர்களுக்கு மிகவும் கொடிய ஆண்டாக காணப்படும். கடைசி கால அழிவின் அடையாளத்தை நாம் இந்த ஆண்டில் ஏராளமாய் காண்போம். இவைகளில் இருந்து நம்மை தப்புவிக்க கர்த்தர் உங்களோடும் என்னோடும் கூட இருப்பார்.
                   யாத்திராகமம் 11:7 லில் மோசே பார்வோனிடத்தில் கர்த்தர் எகிப்தியருக்கும் இஸ்ரவேலருக்கும் பண்ணுகிற வித்தியாசத்தை நீங்கள் அறியும்படிக்கு செய்வார் என்று சொன்னதுபோல இந்த ஆண்டில் கர்த்தரை நம்புகிறவர்களுக்கும் நம்பாதவர்களுக்கும் கர்த்தர் வித்தியாசத்தைக் காண்பிப்பார்.
                  பிரியமானவர்களே, இந்த ஆண்டில் உங்களுடைய ஆசீர்வாதம் முழுமை அடைய இறைவனை பிராத்திக்கிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.


No comments:

Post a Comment